நம்ம பொண்ண எப்படியாவது நடிகையாக்கணும்

நானும் நம்ம ஷ்திரியாவும் அணிஞ்சிருக்கற ஆடை ( டிரஸ்) நல்லா இருக்குதான்னு சொல்லுடா.

@@@@@@@@
என்னடா தமிலரசு ஒண்ணுஞ் சொல்லாம இருக்கறா?
#@@@@
நல்லா இருக்குது பூவரசி.
@@@@@@
நா சினிமா நடிகையாகணும்னு ரொம்ப ஆசப்பட்டேன். அதுக்குள்ள என்ன உனக்கு கல்யாணம் பண்ணித் தொலச்சுட்டங்கடா தமிலரசு.
.......
என்னடா அமைதியா வர்ற?
@#####
அய்யோ பூவரசி நா என்ன சொன்னாலும் அதுல எதாவது தப்புக் கண்டுபிடிச்சு என்ன பூரிக்கடையில அடிப்பயே.
@#####
சரி நாஞ் சொல்லப்போறதை சரின்னு சொன்னா இன்னைக்கு பூரிக்கட்டைக்கு வேலையில்ல. எதிர்மறையா பேசினா மண்டைய ஒடச்சிருவேன். ஜாக்கிரதை.
@@####
சரி சொல்லு பூவு. நீ என்ன சொன்னாலும் இனிமே 'உம்'னு சொல்லமாட்டேன் பூவு. 'சரி,சரி, சரி'ன்னுதா சொல்லுவேன்.
@#####
இப்பத்தாண்டா தமிலரசு நீ நல்ல பையன். நம்ம டாட்டர் (மகள்) ஷ்திரியாவை எப்பிடியாவது சினிமாவ்ல கதாநாயகி ஆக்கணும். அதுக்குத்தாண்டா நானும் ஸதிரியாவும் நல்ல குடும்பப் பாங்கான தமில் பொண்ணுங்க மாதிரி ஆடை ( டிரஸ்) அணிஞ்சிட்டு இருக்கறோம். நல்லா இருக்கான்னு சொல்லுடா.
@@@######
பூவு நீ எது சொன்னாலும் சரி, சரி, சரிதான். அருமை பூவு. உன்ன யாராவது கொற சொன்னா பூரிக்கட்டையிலே போட்டுத் தள்ளு. என்ன மட்டும் இனிமே அடிக்காத பூவு.
@@#@#@
சரி, சரி. எங் கனவு நனவாக நீ குறுக்க வராம இருந்து எப்பவுமே வாய தொறக்காம இருந்தா நா ஏண்டா உன்ன அடிக்கப்போறேன்.
########
உனக்கு ஆயிரங்கோடி நன்றி பூவு.

எழுதியவர் : மலர் (19-Sep-16, 7:00 pm)
பார்வை : 264

மேலே