கற்றவர் சபை
கற்றவர் சபையில் உனக்கொரு
இடம் ஒதுக்க பட வேண்டும்
கவிஞன் சொன்னானே பாட்டில்...
அதை உண்மையாக்கினான்
இளைஞன் இன்று...
தமிழன் கற்றால் மட்டுமே
பொருள் திரட்ட முடியும்
வாழ்வில்...
பொருள் இல்லாதவருக்கு
இவ்வுலகம் இல்லை...
அருள் இல்லாதவருக்கு
அவ்வுலகம் இல்லை...
இதை வென்றிட கல்வி
மட்டுமே ஆயுதம்...
கல்வி ஒன்றே அணைத்து
செல்வங்களை தன்
வச படுத்தும்...