பணம்

பணம் என்றால் பிணமும்
வாயை பிளக்கும் என்பார்கள்...
பணம் பத்தும் செய்யும்...
பகைவனை நண்பனாக்கும்
நண்பர்களை பகைவர்களாக்கும்...
வல்லமை உண்டு
பணத்துக்கு...

கூடா நட்பு உண்டாக்கும் பணம்
நல்ல நட்பை சந்தேகம் படும்
பணம்...
நேற்று திட்டிய பந்தம்
கையில் பணம் இருந்தால்
தேடி வந்து போற்றும் உன்னை...
திறமை இருந்தால் தேடி வரும்
பணம்...

தலைமுறை தாண்டி பணம் காக்க
வேண்டும் பண்பு...
பணம் நிறைந்தால் பணிவு
குடி கொள்ள வேண்டும் மனதில்...

எழுதியவர் : பவநி (19-Sep-16, 7:43 pm)
Tanglish : panam
பார்வை : 98

மேலே