ஊர்சுற்றினார்

ஒரு மூக்கு கண்ணாடி
ஒரு முழத்துண்டு
இடையில்
ஒரு ஊன்றுகோல்
நடக்க
இதுவே அடையாளம்
மகாத்மா காந்திக்கு
ஊர்சுற்றினார்
சுதந்திரம் பெற்றுத்தர

இப்பொழுதும்
ஊர்சுற்றுகிறார்
பணமென்னும்
தாள்களின் வழியே !

--கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Sep-16, 9:48 pm)
பார்வை : 61

மேலே