காதல் கைதிகள் ---முஹம்மத் ஸர்பான்

என் வாசலில்
பூத்த ரோஜாக்கள்
பட்டுப் போனதால்
விழிகள் அழுகிறது

சில்லறை போன்ற
புன்னகை காதல்
கல்லறை எங்கும்
கண்ணீரின் வாசகம்

பாலைவனத்தில்
நடந்த நினைவுகள்
பட்டாம் பூச்சியின்
சிறகுகளில் பார்த்தேன்

கனவின் வாழ்க்கை
மெய்யில் பொய்யானது
மின் மினிப் பூச்சிகள்
முன்னால் இறக்கின்றது

கைகளின் ரேகை
தீப்பற்றி எரிகிறது
நகத்தின் சதைகள்
எண்ணெய் ஊற்றுகிறது

வௌவாலை போல்
மின்னலில் சிக்கினேன்
காளானாய் மாறி
மண்ணோடு விக்கினேன்

விரகத்தின் வதைகள்
மனதோடு பேசியது
மாங்குயில் சத்தம்
ஓலமாய் கேட்டது..,

வானத்தின் எல்லை
நரகத்தில் தள்ளியது
இதயத்தில் இல்லை
என்னவள் ஓவியம்

பெண்ணின் உள்ளம்
கருவறையில் முளைத்தது
திசைகள் மாறியதில்
காதலும் தோற்றுப்போனது

இறைவனின் நீதியில்
இருவரும் குற்றவாளிகள்
'உனக்கும் நானென'
தூக்கில் தொங்குகிறேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Sep-16, 10:46 am)
பார்வை : 209

மேலே