வளர்ச்சி

காய் பழுத்தால் பயனாகும்,
பழம் பழுத்தால் குறையாகும்
குணம் பழுத்தால் நிறைவாகும்

மேகம் கருத்தால் மழையாகும்
மண் கருத்தால் செழிப்பாகும்
மனம் கருத்தால் கவலையாகும்

பரிவு செழித்தால் கொடையாகும்
உறவு செழித்தால் உயர்வாகும்
இனம் செழித்தால் வளமாகும்







எழுதியவர் : (21-Sep-16, 8:18 am)
பார்வை : 196

மேலே