தண்ணிருக்காகவா எவ்வளவு

தண்ணீர் தண்ணீர்
என்று புலம்பி
தடியடி வன்முறை
எங்கும் பெருக.

வழக்குரைக்க
நீதிமன்றங்கள்
என்று தாண்டி ஓட.

தண்ணீரை ஓட விடாமல்
அடக்கி அணைகளில் தேக்கி
பறறாக்குறை என்று மனிதன்
ஓலமிட.

பயிரை வளர்த்து
நீர் வரத்து இல்லாமல்
அவை வாட..

மனமிழந்து
தன்னுயிரை விட்டு
கதறுகிறான் மனிதன்
இன்னொரு எல்லையில்.

.

உ யிர்ச் சேதம், பொருட் சேதம்
இழப்பு என்று மக்கள் திக்குமுக்காட

நினைத்துப் பார்த்தால்
தண்ணீருக்காகவா இவ்வளவு
என்று மயங்கி
துவள்கிறது நெஞ்சம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (21-Sep-16, 1:08 pm)
பார்வை : 1473

மேலே