நான் தாய் தந்தையால் கைவிடபட்ட பிள்ளை

நான் தாய் தந்தையால்
கைவிடபட்ட பிள்ளை:

அடுத்த பிறவியில் நான் மறுபடியும்
உங்கள் பிள்ளையாக பிறந்தால்
தாங்கள் செல்லும் இடமெங்கும்
என்னையும் அழைத்துச் செல்லுங்கள்
இல்லையென்றால் என் உயிரை
அழித்து விட்டு செல்லுங்கள்
என் ஆன்மாவிற்கு
இச்செயலில் முழு சம்மதம்
மறுத்து மீண்டும் அனாதையாக்கினால்
நான் உருவாக்கும்
கற்பனை உலகிலும்
என் மனம் அழுதழுதே சாகும்
இது நிஜத்திலும் கூட தொடரும்

உங்களை ஒரே ஒருமுறை
பாா்த்திருந்தால் ஓவியனும்
மிஞ்சுமளவு ஒரு ஓவியம்
படைத்திருப்பேன்
எனக்கு உயிா் கொடுத்த
உங்களுக்கு ஓவியம் மூலம்
நான் உயிா் கொடுத்திருப்பேன்
அதை பாாத்து பாா்தே என்
வாழ்நாளை வளா்த்திருப்பேன்

அதைச் செய்யத்தான்
எனக்கு கொடுத்து வைக்கலை
அதன் விளைவு தான் நான்
அனுபவிக்கும் தனிமை தொல்லை

தனிமை வேண்டாம் என்று
நான் சொல்ல வரல
தனிமையே வாழ்வாகி விடுமோ என்னும்
அச்சம்தான் என்னுள்ள

எனக்கு உங்கள் சொத்து என்றும்
தேவை இல்லை
உங்களிடம் இருந்தால் தோன்றும் சொா்கம்
என் தேவையின் எல்லை
அதை அனுபவிக்கத்தான்
எனக்கு கொடுத்து வைக்கல

பெற்றவா்களை விட
அன்பாய் பேணுபவா்கள்
இவ்வுலகில் கிடைப்பாா்களா?
இடையில் வந்து போகும்
சொந்தங்கள் இவா்களுக்கு
சிறிதும் இணையாவா்களா??

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (21-Sep-16, 7:56 pm)
பார்வை : 131

மேலே