அன்னை
நான் கருவறையில்
உதைக்கும் போது வலிப் பொறுத்து
பிறக்கும் போது பெருவலியை தாங்கி
என்னை ஈன்றெடுத்த தெய்வமே!
மழலை பசிப்புரிந்து
தன் இரத்தம் உறைத்து
பாலாக மாற்றி
உணவாக தந்து
பசிப்போக்கும் தெய்வமே!
துன்பம் அடையும் போது
கண்ணீரை துடைப்பதும்
இன்பம் அடையும் போது
இன்னிசை கொடுக்கும் தெய்வமே!
எம்மை தூங்க வைக்க உன் உறக்கம் கெட்டு
என் சிரிப்பை ரசித்து
என் தவறை மன்னித்து
தண்டனை கொடுக்காத தெய்வமே!
கடவுளை கண்டதில்லை
காணவும் தேவையில்லை
வணங்கவும் அவசியமில்லை
நீயே கண் கண்ட தெய்வமே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
