ஏக்கம்

அம்மாவுக்கு அடுக்கடுக்காய்
குழந்தைகள்.
அடுத்தவேளை சோற்றுக்கே
வழியில்லை
தேவையா இது? என்றேன்
தெரியாத வயதினிலே.
அழுவாள் அம்மா..........
அது ஏனோ அடிக்கடி
வருகிறது நினைவுக்கு
குழந்தை வேண்டி,
ஆஸ்பத்திரிக்கு போகும் போதும்,
அரசமரத்தை சுற்றும்போதும்.

எழுதியவர் : CHOKKALINGAM (21-Sep-16, 4:24 pm)
சேர்த்தது : ப சொக்கலிங்கம்
Tanglish : aekkam
பார்வை : 149

மேலே