வந்தாள் புது வசந்தம்

புத்தம் புது மழைச்சாரல்
தேன் மலர் தென்றல் காற்று
தாங்கி வரும் புது மண் வாசம்
சோலை குயில் பண் இசைக்க
தோகை மயில் நடனம் ஆட
மரம் கொத்தி மத்தளம் கொட்ட
பண்போடு காதல் ஜோடி ஒன்று
சோலையாம் காதல் பந்தலில்
இன்பமாய் க்ளிப் புற்றிருக்க
வசந்தம் வருகைத்தந்தாள்
காலங்களின் மகா ராணியாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-16, 7:04 am)
பார்வை : 136

மேலே