காவேரி பார்வை - தொலையும் மனிதம்

உறக்கம்:
ஆழ்ந்த உறக்கத்தில்
அழகான கிறுக்கல்கள்
ஆங்காங்கே தோரணமாய்
அதிசயமாய் தேவதைகள்..!

சேதி :
களைப்புதீரும் மருந்தெனவே
கண்ணுறக்கம் கடந்துவர
காதில்செய்தி கிழித்ததம்மா
காவேரியென்று பெயர்சொல்லி ..!

சூழ்ச்சி:
ஏறி,குளம், கிணறு எல்லாம்
ஏலம்போட்டு விற்றுவிட்டோம் ்
ஆற்றுமணலை கூறும்போட்டு
ஊற்றுநீரை உறிஞ்சிவிட்டோம்!

மடமை:
ஈவுயில்லா மனிதனைப்போல்
இரக்கமற்ற அரக்கர்களாய்
காவிரித்தாயின் காவலுக்கு
கட்சிசாயல் பூசிவிட்டோம்..!

வெறி:
கண்டவனெல்லாம் கரையேற
கருப்புஆடு கூட்டமொன்று
உடமையெல்லாம் தீயிட்டு
உரிமைகோரி புறப்படுதாம்..!

காவேரி:
உத்தமனொருவன் இல்லையென
உயிரைக்கையில் பிடித்தபடி
இக்கரைவரவே துடிக்கின்றாள்
இனமானத்தமிழா எழுகயென்று..!

புரிதல்:
காடும்,மலையும்,காற்றும் கடலதில்
கலந்திடும் ஆறுகள்எல்லாம்
அனைவருக்கும் இங்குசொந்தமடா
அதிகாரம் எவனுக்குமில்லையடா..!

விவசாயி:
உலகைக்காத்திடும் விவசாயி
உணவையூட்டும் உயிர்த்தாயி
தாயைத்தவிக்க விட்டதனால்
தண்ணீரென்றே தவிக்கின்றதோ..?

துஷ்பிரயோகம்:
அமைதியான வாழ்முறைமறந்து
அக்கினியோடு போரிட்டால்
எரிந்துபோகுமுன் எதிர்காலம்
எதிரியென்றே உன்னினம்சாவும்..!

வரலாறு:
ஆண்டப்பரம்பரை வரலாறு
அழிக்கநினைப்பவன் சுக்குநூறு
வீரம் தமிழ்ப்பால் விளையாட்டு
விழுந்தால் மார்பின்முகங்காட்டு..!

வீரம்:
மார்பில் சுமந்த அம்புகளும்
மரபை சுமந்த பண்புகளும்
ஈன்றத் தாயின் பெருமைகளாய்
இன்றும் மண்ணில் இருக்குதடா

ஆயுதம்:
எதிரியென்னை ஆக்காதே -
எதிர்த்தப்பகை அது தீராதே.!
அகிம்சையோடு போகுமென்னை
ஆயுதமெடுக்க வைக்காதே..!

நிதர்சனம் :
காதல்நிறைந்த கலியுகக்காலம்
கலந்துபோகவோர் இனமெனமாறும்
மனிதம்மட்டுமே வாழும்போது
மறையும்விரைவில் பிரிவினை,கேது ..!

எழுதியவர் : ஜாக் ஜெ ஜீ (22-Sep-16, 2:57 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 100

மேலே