தெருவெல்லாம் தேவதை - ஹைக்கூ

அள்ளி கொடுக்கும்
அட்சய பாத்திரம்
ஏழையின் வறுமை
---------------------------------------------------
பால் நிலவு
இருந்தும் குடிக்கமுடியவில்லை
தவிப்பில் கைக்குழந்தை
----------------------------------------------------
கை நிறைய பணம் இருந்தும்
ஒரு ரூபாய் போடும்
மனதின் பிச்சைக்காரன்
----------------------------------------------------
அன்னம் பாடும் வாய்க்கு
அண்ணம் போட
வழியில்லை
----------------------------------------------------
தெருவெல்லாம் தேவதை
தேடுகிறாள்
காதல் பிச்சை
---------------------------------------------------
-ஜ.கு.பாலாஜி-