முதலிரவு
விரகத்தின் நரகம்
அரக்கத்தை எழுப்பும்
மிருகமும் இறையை மிஞ்சும்
புனல் ஒரு பக்கம்
கனல் ஒரு பக்கம் - மனப்
பூனை மதில் மேலே தவிக்கும்
கானல் நீராக கண்ட காட்சி
காட்டாறாய் மாறுது
கண்முன்னே ஆறைக் கண்டு
நாவறண்டு போகுது
அனல் மூச்சு பெருகட்டும்
பனி ஆடை உருகட்டும்
அணிகலனாய் இரு உடல் மாறட்டும்
இளமைகள் புதுசானதே
இம்சைகள் சதிராடுதே
இன்னுமென்ன பொறுமை என்று
இளமை கேள்வி கேட்குதே
காதலின் உச்சக் கட்டத்தில்
காமமும் தலைக்கேறுதே
கட்டிலில் கச்சைக் கட்டிட
கட்டுடல் இரண்டும் ஏங்குதே..
தேகத்தைத் தீண்டும் தென்றலுக்கென்ன
தாகத்தில் தகிப்பவன் நானல்லவா
ஏக்கத்தின் தாக்கம் இத்துடன் போதும்
என் பக்கம் வா
கண் சொக்கவே
அந்த காமன் பாடம் படித்து முடிக்கலாம்....
குறிப்பு: முறையற்ற காமம் ஆபத்தானது..