தற்காலப் பெண்களிடம் அதிகரித்து வரும் ஆணவம், திமிர், அகங்காரம் ஏன்
செல்ல மகளாய் வளர்ந்தவள்
சின்ன சிணுங்கல்
கடுகளவு கவலை
துளியளவு துன்பம்
எதையும் பார்த்திராத
வசதி படைத்த
வாலிப பெண்களுக்கு
உடையும்,உணவும்
இடமும், புகழும் -ஓர்
பொருட்டு அல்ல !!!!
உடைக்காக ஒரு ஏக்கமும்
உணவுக்காக ஒரு தவிப்பும்
இடத்திற்காக ஒரு கவலையும்
வாழ்க்கைக்காக ஒரு வேலையும்
நேர்மைக்காக ஒரு உழைப்பும்
நட்புக்காக சில நண்பர்களும்
அன்புக்காக சில இழப்புகளும்
இன்பத்திற்காக சில துன்பங்களையும்
சந்திக்காத சில பெண்கள்
தங்களது சந்தோசத்தை
கருத்தில் கொண்டு
பிறரை ,அவர்களது நிலையை
எண்ண மறந்து விடுகின்றனர் .
ஏனெனில்
இவர்களது பாதி
வாழ்க்கையை இவர்களது
பெற்றோரே வாழ்ந்து
விடுகின்றனர் !!!
இவர்களது மீதி பாதி
அழகுக்காக
புகழுக்காக
பதவிக்காக
வசதிக்காக
இப்படி ,போட்டி போட்டு
பொறாமையாலும்
பெருமையாலும்
கர்வத்தாலும்
காலம் கழிந்து போய்
விடுகின்றது !
பிறந்த வீட்டில் தன்
அதிகாரம் நிறைவேற
அனுமதிக்கும் பெற்றோரால்
புகுந்த வீட்டிலும் தன்
அதிகாரத்தை தானே
நிறைவேற்றிக் கொள்ள
தலைக்கனம் பிடித்து
தாறுமாறாய் திரிகின்றனர்
தற்காலப் பெண்கள் !!!