சோகங்களாக மாறியது எனது பயணம்

துன்பமும் துயரமும் என்னை துரத்திய நேரங்கள் என்னுடன் பேசிய சோகங்கள் பேசாத மோகங்கள் தீராத தாகங்கள் என்று நான் சென்ற பயணங்கள் இன்று வரையிலும் தொடரும் தருணம் தெரியாத பல மறுமங்களாக மாறிவிட்டன.

இரவு நேரம் இருண்ட உலகம் விடியும் நேரம் அகண்ட உலகம் எனவே உலக வாழ்க்கை எந்த ஒரு மனிதனுக்கும் நிரந்தமானதல்ல என்பதை எந்த ஒரு மனிதனாலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது நன்மையும், தீமையும் மனிதனுக்காகவே ஏற்படுத்தப்பட்டது.

பிறந்ததன் நோக்கம் வாழ்விலோ தயக்கம் மனதிலோ சோகம் செயலிலோ மயக்கம் சிந்தனையிலோ தாகம் இவைகளை உணர்ந்த நேரம் வாழ்க்கை எனும் பாடம் பலவற்றை எனக்கு கல்வியாக கற்றுத் தந்தது என்பதை உணரும் மனிதனாக நானிருக்கிறேன்.

இளமையில் மோகம் முதுமையில் சோகம் என்பதே மனிதனின் வாழ்க்கை அதை அறியாத மனிதனுக்கு மறுமையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் எனவே வீணான எண்ணம் உன்னை அழிக்கும் பாவத்தின் சின்னம் என்பதை மறந்து ஷைத்தானின் பிடியில் சிக்கி விடாதே !

எழுதியவர் : அப்துல் ஹமீட் (23-Sep-16, 8:14 pm)
பார்வை : 80

மேலே