குலப்பு

குலப்பு,-குலப்பு.......
@@@@@@
என்னங்க பாட்டிம்மா ரொம்ப நேரமா குலப்பு, குலப்பு-ன்னு சத்தமா சொல்லிட்டிருக்கறீங்க?
@@@@@@
நா ஏன்டி வள்ளி சத்தம் போடப்போறேன். எல்லாம் எம் பேரங் குலப்பு பண்ணற வேலைடி பொன்னி.
@@@@@@@
என்னங்க பாட்டிம்மா குலப்புன்றீங்க, பேரன்னுஞ் சொல்லறீங்க? ஒன்னுமே புரீலிங்க பாட்டிம்மா.
@@#@@@@
அடியே பொன்னி நா உங்கிட்ட சொல்ல மறந்துட்டன்டி. பாட்டனாவ்லெ (பாட்னா) எங் கடசி மகன் கதிரு ( கதிர்) வேல பாக்கறான் அவுனுக்கு அஞ்சு வயசுல ஒரு ஆம்பளப் புள்ள இருக்கறான்னு சொன்னன் இல்லையா?.....
@#@@@@@@@
ஆமாம் பாட்டிம்மா நீங்க அதப் பல தடவ சொல்லிருக்கிறீங்க .....
######
அவந் தான்டி இந்தக் குலப்பு. எங் கடசி மவங் கன்னியப்பனும் எம் மருமவ மாரிக்கண்ணு-ம் பேரன் குலப்பும் நேத்து வந்தாங்கடி பொன்னி. எம் மகனும் மருமவளும் இந்தப் குலப்புப் பையனைப் பாத்துக்கச் சொல்லிட்டு உழவர் சந்தைக்குப் போயிருக்காங்கடி.
#@@@#@#
ஓ.....ஓ.... அதான் ரொம்ப நேரமா அவனக் கூப்புட்டுட்டு இருந்தீங்களா? குலப்பு குலப்புன்னு கூப்புட்டு அக்கம் பக்கம் இருக்கறவங்கள எல்லாம் கொழப்பி விட்டுடீங்க பாட்டிம்மா.
@@@##
ஆமாம்ன்டி பொன்னி. எம் பேரன் குலப்பு எந்த நேரமும் எதாவது குறும்பு பண்ணிட்டே இருக்கறான்டி. அவனக் கோவத்தில திட்டுனேன். அவங் கோவிச்சிட்டு எங்கயோ ஓடிப் போயிட்டான்டி பொன்னி.
@@#####
சரி அத விடுங்க பாட்டி. நா அவனத் தேடிப் பிடிச்சு கூட்டிட்டு வர்றேன். அவன் எங்க போகப் போறான் நம்ம சின்ன ஊர்ல. அவம் பேருக்கு என்ன அர்த்தம்னு மாமங்கிட்டக் கேட்டீங்களா?
@@@@@@
நாங் கேக்காம உடுவனா? குலப்பு-ன்னா ரோசா (ரோஜா)ன்னு அர்த்தமாம். இந்திப் பேரா இருந்தாலும் அந்தப் பேரோட அர்த்தம் நல்ல இருக்குடி பொன்னி.
########
ஆமாம் பாட்டிம்மா. ரோஜா பூவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சரி பாட்டிம்மா உங்க ரோஜாவை கண்டுபிடிச்சு அவனக் கூட்டிட்டு வர்றேன்.
@@@@#@###########@#############
குலப் தாஸ் என்ற வடமாநில இந்தியர் ஒருவரின் பெயரை நேற்றைய 'தி இந்து'வில் பார்த்தேன்.
தாய்(லாந்து) மொழியில் குலப் என்றால் ரோஜா. இந்தி அ சமஸ்கிருதத்தில் குலப் -பின் பொருள் தெரியவில்லை.


.

எழுதியவர் : மலர் (23-Sep-16, 11:43 pm)
பார்வை : 200

சிறந்த நகைச்சுவைகள்

மேலே