அழகு விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

ஓமென்னும் மந்திரத்தைக் கையிலே காட்டிடும்
ஆமழகு நல்விநாய கன்தாளை - நாமெல்லாம்
நன்கு வணங்கிடுவோம்; வையமிதில் வாழ்நாளில்
என்றும் நலமே நமக்கு! 1

எப்படிச் சொல்வேன் அழகு விநாயகர்
தப்பாத பேரழகை? எப்போதும் - ஒப்பிலாத
வண்ணன்தான்; ராஜபாளை யம்நகருள் வந்தருளும்
அண்ணலை நீயும் வணங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-16, 10:50 am)
பார்வை : 56

மேலே