முதலிரவு
கன்னியின் காதலை
காமத்தால் அணைப்பது;
மங்கும் ஒளியில்
மழழை மொழியில்
கதைகள் கேட்பது;
வெட்கத்தில் மலரும்
பூவாய் மாது மலர்வது;
இரக்கமற்ற தனிமையில்
துணை தேடி திரிவது;
கூந்தல் மணத்திலே
மங்கையவள் ஆணை
கொள்ளையடிப்பது;
இருவரின் கனவுகளும்
ஒரே கனவாவது!