கூறான வார்த்தைகள்
கூற முனைந்து கூறாத அந்த
கூறான வார்த்தைகள் தான்
என்னை கூறு போடுகிறது….
நேரம் ஒதுக்கி ஒரு ஓரம் நின்று
ஒழிந்து ஒதுங்கி உன்னைப் பார்க்கிறேன்
உன் விழி மொழியை
மொழி பெயர்கும் எனதுள்ளம்
என்னுள்ளே ஏதோ சொல்ல
வார்த்தை தொலைத்த வாதியாய் -நான்
உன் வாசல் வந்து திரும்புகிறேன்
என் வாழ்க்கைத் துனையாய் இறுதிவரை
நீ இருக்க விரும்புகிறேன் !!!