தூவானம் நீ

என்னை நனைத்த தூவானம் நீ
என்னில் இருந்து தூரமானதேன் ?
கண்கள் வரைந்த கவிதை நீ
என் கண்ணீர் வளிய காரணமானதேன் ?

விண்ணில் மலர்ந்த மாலை மேகம் நீ
உன் மஞ்சம் ரசிக்கும் முன்
ஏன் வஞ்சம் தீர்க்கிறாய் ?

நீ கொஞ்சம் பாரத்ததும் என்
நெஞ்சம் திறக்கிறேன்
உன் கண்கள் பாரத்ததும் முழுதும்
மறக்கிறேன்

உன்னை நினைத்துதான்
என் பொழுதைக் கழிக்கிறேன்
இருந்தும் என்னவோ
உனைக் காணத் துடிக்கிறேன்

எழுத்து வடிவிலே எல்லாம் சொல்பவன்
உன் எதிரே வந்ததும் ஊமையாகிறேன்
புதிரான உன்முகம் ஓர்நாள்
புதையலாய் புலப்படும்
அதுவரை காணத உனக்காய்
கவிதை வடிக்கிறேன் !!!

எழுதியவர் : மு.சா.மு.மபாஸ் (26-Sep-16, 3:28 pm)
பார்வை : 218

மேலே