கண்மணியே கணபாராயோ
மழை வரும் நாட்களிலெல்லாம்,
உன் குடை தேடி ஓடிவருவேன் ....
உனைச் சேரா மழைத்துளிகளின்....சாபத்தைக் கேட்க!!
உறக்கத்தையெல்லாம் இரவுப் பலகையில் அழித்துப்பார்த்தும் ,
விடிந்து பார்க்கையில் கனவுகளால் நிறைந்துவிடுகிறாய் ...மாயவளே !
நீ நடந்து போகையில் ,
உன் நிழலை நிழற்படமாக பூமியே மாட்டிக்கொள்ள,
நானோ தெருமுனையில் கூசிப்போய் நின்றேன்... காதல் யாசகம் கேட்டு!
உன் கரம் சேர்க்கும் ஓர் வரம் .....
என் வாழ்க்கை வெல்லும் நிரந்தரம்.......
நீ சொல்லு ஒருதரம்.....
நொடிப்பொழுதில் நம் சுயம்வரம்!!