காளைகள் இல்லை மகன்கள்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்து
சங்க வீரம் பல வளர்த்து
எங்கணக்குள்ள போனாயோ
எம்குல வீரமே......
அங்குட்டு,இங்குட்டு அலைவியே!
எங்குட்டு போனாயோ!!!
செத்த நேரம் நான் உறங்க
மண்ட கொம்பில் லந்து பண்ணி
உசுப்பி தான் விடுவாயே!!......
வெள்ளனே ஊரணியில் நீராடி
பகுமானம் பல பண்ணி விட
சோவாரிட்டு கொல்ல பக்கம் வருவாயே!
மறந்துதான் போவேனோ!!!!!
வையும் போது மண்டைய
பைய சாய்த்து ஆட்டுவியே
களவாணி பயலே.......
உன்ன போய் வித்தனே
சித்தம் எல்லாம் நீ நின்னு
நித்தம் கொல்லுறியே
எம் குல விளக்கே!!!!!!!
ஊரான் விதிச்ச தடைக்கு
உன்னபோய் வித்தேனே
கூறு கெட்டு போனேனே!!!!!
-மூ.முத்துச்செல்வி
---------------------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு மீண்டும் வர
இப்படைப்பு மதுரை காளைகள் வளர்க்கும் குடும்பத்திற்கு சமர்ப்பணம்......
மதுரை பாஷையில் பிழை இருப்பின் மன்னிக்கவும்............