அழகு தமிழ் பேசும் அழகி நீ

அவன்
----------
அழகு தமிழ் பேசும் அழகி நீ
அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ
அகங்காரம் கொண்ட அழகி நீ
அகட விகடமாய் பேசும் அழகி நீ
அகத்தில் முழு நிலா அழகி நீ

அகம் முழுதும் நிறைந்தவளே.....
அழகுக்கு மகுடமாய் இருப்பவளே.....
அகோரமாக்குதடி உன் நினைவுகள்.....
அக்கினியில் எரியுதடி என் இதயம்.....
அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!

அவள்
---------
அச்சப்படாதே அச்சுதனே..........
அகம்பை யான் உனக்கேதான்.......
அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை
அடர்த்தி கொண்ட நம் காதல்........
அகிலம் போற்றும் காதலடா..........!!!

அடைமழைபோல் இன்பம் தருவேன்.......
அந்தகாரத்தில் இன்பம் தருவேன்......
அபலை என்னை ஏமாற்றிவிடாதே......
அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே....
அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!!

&^&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Sep-16, 8:12 pm)
பார்வை : 157

மேலே