தெளி
தாகம் தீரக்கானல் நீரை
பருகமுடியுமா?
பசிக்கும்போது பணத்தை தின்று
வாழமுடியுமா?
நீதி நியாயம் தொலைந்தால் புவியில்
மனிதம் நிலைக்குமா?
நேசம் நெஞ்சில் தொலையும் போது
காதல் வாழுமா?
வேசம் போடும் மனிதர் பாதை
முடிவில் இனிக்குமா?
அதை அறியாப்பேதை நீயும் போகும்
பாதை வெளிக்குமா?
இளமை வாழ்வில் இருக்கும் வரையில்
எதுவும் தெரியாது
முதுமை வாழ்வில் மனிதம் தேவை
அறிவாய் கண்ணம்மா
நீதி நியாயம் நீண்டு வாழும்
நிலையா வாழ்க்கையில்
நீ நேசத்தோடு கைகள் நீட்டும்
நாளும் வருகையில்
அன்பை கொடுத்து பண்பாய் நடந்தால்
அகிலம் போற்றுமே
உன் செயலைக் கண்டு உலகம் உன்னை
திரும்பிப் பார்க்குமே