விதி
நாளை மாறும் என்று
கனவு காணும் கூட்டம் உண்டு
அந்த கூட்டம் சொந்தம் என்று
சொல்கொள்வதில் எனக்கு பெருமை உண்டு
என்றும் வென்றிடும் விதியினை
வென்றிடும் ஒருநாள் வருமென்று
தினம் தினம் மனம் காத்திருந்து
போராடும் மனது எனது ...
கனவும் களவு போகலாம்
களவும் தொழிலாகலாம்
உலகம் உள்ளவரை
எங்கள் நிலை தொடரலாம்
இன்று முடியும் என்று
உறங்கியதில்லை எந்நாளும்
நாளை விடியும் என்று உறங்குவோம்
விதியின் கையில் இல்லை வாழ்க்கை
விதிதான் எங்கள் வாழ்க்கை