டைட்டானிக் ஒரு காதல்டானிக்

கண்களால் தேடிக் கொண்டோம்..
கனவுகளை மென்று தீர்த்தோம்...
கண்ணீரில் கொஞ்சம் ஆழம் பார்த்தோம் ...
காலத்தின் மூளை முடுக்கெல்லாம் ஓடித் திரிந்தோம் ....
புன்னகைச் சிறையில் கவலைகளை கைதியாக்கினோம்...
புலன்களில் புலர்ந்து புலப்பட்டுப் போனோம்...
சேர்ந்திருந்த நேரத்திலெல்லாம் உயர்திணையாய் உயர்ந்தோம் ...
பாரா நொடிகளிலெல்லாம் அஃறிணையாய் உழன்றோம்....
என் மூச்சில் உனைக் கோர்த்து ,
இதயத்தில் உயிர்ச்சரம் தொடுத்தேன்!
விதி எனக்கு வழங்கும் மரணத்தை,
சதி முறித்து நீ உனதாக்கியது .....
உன் இதயத்தின் அழகான சுயநலம் தான்!
இனி ...
உன் நினைவில் நான் நித்தமும் நகர்வேன்,
ஆடைப் அணிந்த நெருஞ்சிமுள்ளாய் .......அன்பே!!