என் காதல் பூ
நீ தூவி போன
புன்னகையில்
மலர்ந்தது என் காதல் பூ ....
நீ வீசி போன
மௌனத்தில்
வாடியது என் காதல் பூ ....
நீ பேசி போன
வார்த்தையில்
உயிர்த்தது என் காதல் பூ ....
நீ வந்து போன
நிமிடத்தில்
வாசம் வீசியது என் காதல் பூ ...
நீ தந்து போன
பிரிவினில்
மரித்தது என் காதல் பூ ....