காதல் காதல் மட்டும்

..."" காதல் காதல் மட்டும் ""...
காதல்
மெல்லமாய் சொன்னாலும்
சத்தமாய் சொன்னாலும்
அதை சொல்ல சொல்லத்தான்
எத்துணை இனிமை !!!
கோடையின் தென்றல்
புயலின் அமைதி !!!
மழைவிழும் மண்வாசம்
மொட்டு விரியும் சப்தம்
மலர்களின் மணம்
மனதுக்குள் மழை
மங்காத்தா ஒளி !!!
பயிலாத பாஷை
பார்க்காத கொடுமை
பசிக்காத பசி
பார்வையின் பரிமாற்றம்
படைப்பின் பரிணாமம் !!!
குளிர்கால தேநீர்
குழலின் இன்னிசை
குழந்தையின் குறும்பு
குற்றால நீர்ச்சாரல்
குளவியின் கொடுக்கு !!!
கண்களின் படைப்பு
கம்பியில்லாத சிறை
கனிந்த முக்கனி
கரும்பான கவிதை
கருவாகும் காவியம் !!!
சிணுங்களின் பிறப்பிடம்
சிருங்கார தோட்டம்
சிம்போனியின் இன்னிசை
சிந்தனை தேனூற்று
சிக்கலின் முழுவடிவம் !!!
விசும்பல்களின் விம்மல்
விருப்பத்தின் உருவம்
விரக்தியின் வடிவம்
விடியலின் தேடல்
விடியாத இரவு !!!
நிதர்சனத்தில் உறவு
நிசப்தத்தின் சப்தம்
நிம்மைதியின் ஊற்று
நினைவின் நிலையாமை
நிலவின் ரசிகன்(கை) !!!
சரம் தொடுக்கும் தமிழால்
இன்னும் எத்துணை எத்துணை !!!
காதல்
மெல்லமாய் சொன்னாலும்
சத்தமாய் சொன்னாலும்
அதை சொல்ல சொல்லத்தான்
எத்துணை இனிமை !!!
என்றும் காதலுடன் உங்கள் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...