ரோஜாக்கள் மலர் தூவும்

நீ நடக்கும் பாதையில்
ரோஜாக்கள் மலர் தூவும்
நீ புரியும் புன்னகையில்
முல்லை மலர் சிரிக்கும்
நீ பார்க்கும் பார்வையில்
அந்தி வானம் கவிதை எழுதும்
நான் நடந்து வரும் போது
உன் நெஞ்சக் கதவு திறக்கும் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-16, 9:29 pm)
பார்வை : 102

மேலே