என் காதலியே

பெண்ணே!
நீ கவிதை,அறிந்தேன்!
உன் பெயர் எழுதி !
பெண்ணே!
நீ மழையானவள் ,நனைந்தேன்!
உன் வருகையில் !
பெண்ணே!
நீ புல்லாங்குழல் ,உணர்ந்தேன்!
உன் இதழ் பிரிவில் !
பெண்ணே !
நீ பூக்களின் பூங்கா, நுழைந்தேன் !
ஒரு வண்ணத்துப்பூச்சியாய்!
ஒரு சிறகு எரிய ஒரு சிறகு
அசைத்து வழி தேடுகிறேன்!
உன் காதல் பூங்காவில்
உன் இதழ் மலர்த்தேடி!
பெண்ணே!
எத்தனை முறை சொல்லியும்
இந்த விழிகள் கேட்க மறுக்கிறது!
உன் முகத்தை காட்ட சொல்லி
அடம் பிடிக்கிறது !
வேறு என்ன செய்வது நிலவை காட்டி
சமாதானம் செய்கிறேன் !
நீ தான் என்று!

எழுதியவர் : தேவிகா (28-Sep-16, 6:52 pm)
சேர்த்தது : devika devendran
Tanglish : en kathaliye
பார்வை : 97

மேலே