கல்லரைவரை காதல்

ஆத்தோர மணலெடுத்து அழகான
வீடு கட்டி விளையாடும் நேரத்திலே
மழைவந்து கலைத்ததடி...

மல்லிகை மொட்டெடுத்து மாலை
ஒன்னு தொடுத்து வச்சேன்
மங்கைக்கு சூட்டுமுன்னே நாராகி
போனதடி...

கார்கால மேகங்கள் காற்றோடு
கறைவதுபோல் என் மணக்கோட்டை
கண்ணீரில் கரைந்ததடி..

காலம் கனிந்த நேரம்
உன் நெஞ்சில் இல்லை ஈரம்
வார்த்தை ஒண்ணு சொல்லியிருந்தா
வாழ்க்கை கூடுமடி..

சோகம் என் நெஞ்சை வாட்ட
என் தேகம் மெலிந்ததடி
என் ஆசை தெரிந்த பின்னும்
ஏன் இன்னும் மௌனமடி...

பஞ்சுப்போல் என் நெஞ்சு
வெடிக்குதடி
உன் நெஞ்சு துடிக்காமல் அதை
வேடிக்கை பாக்குதடி

என் கல்லரையிலாவது
உன் காதலை
சொல்லடி... மீண்டும் பிறப்பேன்
உன் காதலுக்காக...

எழுதியவர் : செல்வமுத்து .M (29-Sep-16, 9:09 am)
பார்வை : 389

மேலே