உண்மை சொன்னாய் ஊமையானேன்

உண்மை சொன்னாய் ஊமையானேன்...

உண்மை சொன்னாய் ஊமையானேன்
என் உள்ளம் வென்றாய் மென்மையானேன்
எனையே வென்றாய் உனக்குள்
நானும் ஐக்கியமானேன்....

விழி முத்தம் தந்தாய் மயங்கி நின்றேன்
இதழ் முத்தம் தந்தாய் மூழ்கிப்போனேன்
எனை நித்தம் கொன்றாய்...
உனக்குள் நானும் புதைந்து போனேன்...

உன் உடலை கிழித்து உன் இதயம் தந்தாய்
என் விழிநீர் துடைக்க உன் உதிரம் தந்தாய்
உன் அன்பில் எனையே மறந்து போனேன்
உன் வாசத்தை என் மூச்சாய் சுவாசித்தே
என் கல்லறைக்குள் மௌனமாய் நானும்
உறங்கிப்போனேன்...

எழுதியவர் : அன்புடன் சகி (29-Sep-16, 8:52 pm)
பார்வை : 377

மேலே