அல்லியும் தாமரையும் நானன்றோ

மெல்லவே வீசிடும் தென்றல் இளம்காற்றே
செல்வாயோ நீயுமென் னைத்த ழுவாமலே
அல்லியும் தாமரையும் நானன்றோ தோழியே
சொல்லித் தெரியவேண்டு மோ
-----இன்னிசை வெண்பா

மெல்லவே வீசிடும் தென்றல் இளம்காற்றே
செல்வாயோ என்னைத் தழுவாமல்--முல்லையும்
அல்லியும் தாமரையும் நானன்றோ தோழியே
சொல்லித் தெரியவேண்டு மோ

-----நேரிசை வெண்பா

----கவின் சாரலன்

தோட்டத்தை மலர்களை தழுவிச் செல்லும் இளம் தென்றலே முல்லையும் அல்லியும்
தாமரையும் நானல்லவோ என்னைத் தழுவாமல் செல்வதேனோ என்று ஓர் அழகிய
பெண் இளம் தென்றலைக் கேட்பது போல் எழுதியிருக்கிறேன் .

இதனால் தமிழ் கவி நெஞ்சங்களுக்கு நீங்கள் கூறும் விளக்கம் ....
பெண் என்றால் தென்றலும் வந்து கட்டித் தழுவ வேண்டுமோ ?

இல்லை இல்லை நீங்கள் விபரீத பொருள் கொள்கிறீர்கள் வீர நக்கீரரே!
அவள் தென்றலைத்தான் தழுவச் சொக்கிறாள் .
சொல்லப் போனால் அழகிய பெண் எனும் நாவலின் தழுவல் தானே நாம் எழுதும்
கவிதைகள் கதைகள் எல்லாம் !!!
ம் ம் சரி சரி ...

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-16, 10:26 pm)
பார்வை : 174

சிறந்த கவிதைகள்

மேலே