அன்னை
செயற்கை தருகின்ற காற்றை விடுத்து
இயற்கை விரித்த போர்வைக்குள் நுழைகின்றவள்...
நெஞ்சங்குளிர கொஞ்சும் மொழியில் மழலைக்கு
தென்றலின் நேசத்தை சொல்லித் தருகின்றவள்......
ஊனை உருக்கி நித்தம் உழைத்தவள்...
தேனையும் பாலையும் ஊட்டி மகிழ்ந்தவள்...
தேகம் வாட்டும் நோய் ஒன்றுமில்லை...
மகனுக்கு வலியென்றால் தன்உயிர் துடிப்பவள்......
நிலவு இல்லாத முகத்தில் கார்மேகம்...
நிலவினைச் சுமந்த அகத்தில் வெண்மேகம்...
முல்லை மலராய் சிரித்திடும் பெண்ணிவள்...
பிள்ளை குணம் கொண்ட அன்னையிவள்......