தாலாட்டும் அன்னை

தூளியிலே தூங்கி எழுந்த ஓர்உயிர்
தூங்காது தவிக்கும் மலர் மேனிக்கு
மரத்தின் கிளையில் தொட்டில் கட்டுதே...
சிறுகிளி தூங்கவே மணிக்குயிலாய் தாலாட்டுதே......


வானம் தொலைத்து விண்மீன்கள் இரண்டு
பூமியில் வந்து புதுமுகம் பூணுதே...
வசந்தம் ஒன்றை வார்த்தையில் தேடுதே...
வருகின்ற சோகத்தை இராகமாய் பாடுதே......


கருவில் உருவாகி தமைக்காயாகப் பிறந்து
கருணையின் வடிவில் தவழ்கின்ற உயிருக்கு
அன்னையாக இன்று ஜென்ம மெடுத்தாளே...
ஆனாலும் அன்னை இல்லையே இவளுக்கு......

எழுதியவர் : இதயம் விஜய் (30-Sep-16, 8:45 pm)
Tanglish : thaalattum annai
பார்வை : 177

மேலே