வலிக்கிறதே வறுமை
: கல்லான கடவுளுக்கு கடலளவு சொத்து இருக்க.
பொல்லாத வறுமையிலே எம்மக்கள் தினம் தவிக்க,
முள்ளாக இதயத்தில் குத்துதே..ஏழை
வலி என்னைநிழலாக சுத்துதே.
பாலுக்கு ஏங்குது பச்சிளமகுழந்தை.
பாலபிஷேகத்தில்கற்சிலை விந்தை.
கோடி கோடிஎன சாமிக்கு குவியுது.
தெருகோடியில் வசிப்பவர் வலிஎங்கே புரியுது.?
அகிலத்தைஆளும் ஆறறிவு மனிதனே.
ஏழ்மையை ஒழித்திட்டால் அகில் நீ புனிதனே.
ஏற்றத்தாழ்வினை படைத்தது யாரடா?
மாற்றத்தில் எம்மக்கள் மகிழும் நாள் கூறடா?