ராஜ விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
பெற்றிடுவோம் ராஜ விநாயகனைப் போற்றியே
பெற்றிடுவோம்; நம்மனி தப்பிறப்பின் - பொற்புடைய
மட்டற்ற மாமதவி நாயகனின் நற்கருணை
தட்டாமல் கிட்டும் நமக்கு! 1 *
ஒப்பிலா ராஜ விநாயகனின் நற்கருணை
எப்போதும் கிட்டிடும் இன்றுபோல் - தப்பாமல்
நாமவனின் தாள்பணிந்தால் நல்லன வெல்லாமே
தாமத மின்றி நமக்கு! 2 *