பெண்

தன் விருப்பத்திற்கு

எதிரான பதிலாக

இருக்க கூடாது

என்ற எதிர்பார்ப்போடு

என்ன வேண்டும் என்று

எங்களை கேட்போர்

எண்ண வேண்டும்

எங்களுக்கும்

எதிர்பார்புகள் இருக்கும் என்று

மற்றவர்களின்

ஆசைகளும் எதிர்பார்புகளும்

அனுமதி இன்றியே தினிக்கப்பட

உணர்வை கொன்று

உயிரற்ற சிரிப்பை

உதட்டில் ஒட்டவைத்து

உலா வரும் நடைபிணமாய்

கருவை சுமக்க

பனிக்கப்பட்ட நாங்கள்

கஷ்டங்களையும் சுமந்துதான்

ஆக வேண்டுமெனில்

நாங்கள் செய்த

பாவம் தான் என்ன?

பெண்ணாய் பிறந்ததை தவிர!

#SOF #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (30-Sep-16, 10:16 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pen
பார்வை : 81

மேலே