யாழ் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

அன்னப் பறவையாம் ஆங்கமைந்த பீடத்தில்
இன்னமுத யாழை இனிதேதான் - தன்மையாய்
வாசிக்கும் நல்யாழ் விநாயகனை நாளெல்லாம்
நேசி! அருள்வான் நலம்! 1 *

இன்னமுத யாழை இனிதே யமர்ந்தபடி
நன்றே இசைக்கின்ற நல்யாழின் - நன்மைதரு
எங்கள் விநாயகன் தாளை வணங்குவோர்க்கு
பொங்குமே என்றும் புகழ்! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-16, 10:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே