​மணக்குதே மண்சட்டி ​

​மணக்குதே மண்சட்டியில்
வழியுதே கஞ்சியுந்தான்
தொட்டுக்கவேப் பாங்காய்
வெட்டிவைத்த வெங்காயம்
கடித்திடவும் காரமிளகாய்
​ஊறுதே எச்சிலுமிங்கே
கூறுதே உள்ளமெனக்கு
கூட்டிடுமே வலுவதுவும் !

ஏழைக்கு என்றென்றும்
எழுதிட்ட சட்டமெனவே
அன்றாடம் அதுவன்றோ
அருந்திடும் உணவன்றோ !

மறந்தோமே மண்சட்டியை
துறந்தோமே கஞ்சியுந்தான்
வந்திடுதே நோய்நொடியும்
நாடுகிறோம் மருத்துவரை !

பழங்கதையை பேசுகிறோம்
வழக்கமதை மாற்றுகிறோம்
நட்டமெனவோ நமக்குத்தான்
நல்லுணவை அருந்திடுங்கள் !

மூத்தோர்வழி காத்திடுமே
குறையின்றியும் வாழலாமே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Sep-16, 9:49 pm)
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே