சகியும் நானும்
செவ்வாய் கிரகத்தில் நான்
*********************************
செவ்வாய் கிரகத்தில் நான்
என்னோடு என் தங்கை...
இது நயவஞ்சகமில்லா உலகம்....
மனித மிருகங்கள் இல்லா உலகம் இது...
நானும் என் தங்கையும்
ஆகாயத்தில் கூடு கட்டி
குடியேறி விட்டோம்.....
மரங்களும்
செடிகளும்
நட்டு வைத்துவிட்டோம்....
நீர் இல்லை என்றால்
என் செந்நீரை தந்து
உயிர் கொடுப்பேன்
என் உயிர்களுக்கு.....
சுவாசிக்கும் காற்று
சுத்தமானதாய் இருக்கிறது...
பூமியில் இருந்து
யாரும் வந்து விடாதீர்கள்...
நாங்கள்
நச்சு புகையில்
மூச்சு முட்டியே செத்துவிடுவோம்.....
நானும் தங்கையும்
இயற்கை வாழ்க்கை
வாழ்கிறோம்
இங்கு செயற்கை இல்லை...
நடிப்பு இல்லை.....
மனம் நிறைய நிம்மதி நிறைந்திருக்கிறது.....
பூமியை கீழே
எட்டிப் பார்க்க கூட
விரும்பவில்லை.....
இந்த வாழ்க்கையே போதும்.....
என் தங்கையை பார்த்து கொண்டே
அவள் கை கோர்த்து கொண்டே
எங்கள் கிரகத்தை மகிழ்வோடு
வலம் வரும் வேளை
நொடியில் அவள் மடியில்
மரணித்து விடுவேன்.....
என் மூச்சு காற்றை
அவளோடு இணைத்திடுவேன்.....
~ பிரபாவதி வீரமுத்து