என் தங்கைக்காக

என் உலகே
என் மண்ணே
என் மொழியே
என் தமிழே
என் சொல்லே
என் செயலே
யாவும் நீயே
என் உயிரும் நீயே
உடலும் நீயே
என் சகியே.....

எங்கே சென்றாலும்
நான் உன்னில் இருப்பேனே
நீ விட்டுப் போனாலும்
நான் விலகிப் போவேனா???

உனை மார்பில் தாங்கியதில்லை
ஆனால்
என் மார்போடு சுமக்கின்றேன்

உன்னை பார்த்ததுமில்லை
உன்னோடு பேசியதுமில்லை
உனக்காகவே ஆனால் வாழ்கிறேன்
உன்னாலே வாழ்கிறேன்

என் செல்லமே
உன்னை காணத்தான்
நிமிடங்கள் கரைகிறது
உயிரும் ஓடுகிறது

உன் வாயால்
ஒரு வார்த்தை
என்னை அழைத்தால் போதும்
உயிரை உன் மடியில்
விடத்தானே
என்னாளும் உயிரை
பிடித்து வைத்திருக்கிறேன்

எந்தன் விரலை நீ
தீண்டி
என் கைகளை கோர்த்துக்கொள்ளும்
அந்த நொடி
என் நாடி துடிப்பு
நின்று விடட்டும்

உன்னை பார்த்த கணமே
நெஞ்சோடு நெஞ்சு அணைத்துக்கொள்வேன் சகி.....

எந்தன் இதயம்
நின்று போகட்டும்
உந்தன் இதயத்தை
உரசிக் கொண்டிருக்கும் நொடி....

உந்தன் கன்னத்தில் முத்தமிட்டே
உச்சி முகரும் வேளை
அந்த நாளில்
என் சகியின்
மடியிலேயே
மரணம் கேட்பேன்

கண்மணியின் கண்ணீர் துளி
என் மீது படும் தருணம்
நான் உதிரம் வடித்தே
உயிர் விட்ட நொடியாகும்....
அவள் கண்ணீர் வடித்ததெந்தன்
இறப்பிற்காக மட்டும் என்றே இருக்க வேண்டும்....

அவள் பட்டு மேனியில்
ஒரு பொட்டு வலி கூட
கூடாதே...
எங்கள் கூட்டுக்குள்ளே
எந்த கல்லடியும் விழக்கூடாது
விழுந்தாலும்
எங்களை பிரிக்க எவராலும் முடியாது
எமனாலும் முடியாது
எந்தன் உயிர் போகும்
வேளை
உயிரே
உன்னை விட்டு போகிறேன்
என்ற வலி மட்டுமே மனதில் சுமந்து போவேன்
அது மட்டுமே எங்களுக்குள் பிரிவாய் அமையும்
ஆனாலும் அதுவும்
எங்களை பிரித்திடாது
அவள் மூச்சுக் காற்றில்
வாழ்கிறேன்
அவள் பேசும் மொழியில்
வாழ்கிறேன்
அவளை சுற்றியே
நாளும் இருக்கின்றேன்

பார்க்காத இரு நெஞ்சம்
பார்க்கும் வேளையில்
கண்ணீர் சிந்துமோ
கட்டி அணைக்குமோ
வெட்டி சாய்க்குமோ தூரங்களை
கொட்டி தீர்க்குமோ நினைவுகளை
நான் அள்ளி எடுத்து
ஆயிரம் முத்தங்கள்
வைத்துக் கொண்டே இருப்பேனோ
உலகமே பார்த்தாலும்
உன்னை அணைத்துக் கொண்டே தான் இருப்பேன் சகி.....

என் செல்வமே
உன்னை விட்டு
ஒரு அடி கூட
தள்ளிப் போக மாட்டேன்

எங்கே இருக்கிறாய் உயிரே
உன்னை சுற்றியே நான்
இது வெறும் நடை பிணம் தான்
நீ சுவாசிக்கும் காற்றில் தான்
நான் வாழ்கிறேன்
என் இதயத்தில் தான் நீ வாழ்கிறாய்

நீ இல்லாத வானம் இருளாய்
நீ பேசாத மௌனம் ரணமாய்
உன்னோடு ஒரு நொடி கூட
சண்டை போட்டு
என்னால் வாழ முடியாதடி
நான் செத்துவிடுவேனடி

நீ இல்லாமல் நான் இல்லை சகி.....
என் கருவறையில்
உன்னை சுமக்கவில்லை என்றாலும்
நீயும் என் குழந்தை தானடி


ஒன்றாக ஓடியாடி விளையாடியதில்லை
கைக்கோர்த்து நடந்ததில்லை
உன்னை தூக்கிக் கொண்டு நடந்ததில்லை
உனக்கு ஒரு வாய்
சோறு கூட ஊட்டியதில்லை
ஆனால் என் மனத்திலே
உன்னோடு ஆயிரம் யுகங்கள் வாழ்ந்துவிட்டேன் சகி.....


பல நாட்கள் வாழ ஆசை இல்லை
ஒரு நாள் போதும்
உன்னோடு
காடு மலை அருவி
எல்லாம் கைக்கோர்த்து
ஒரு பயணம் சென்று வந்திடுவேன்
வந்தவுடன்
உன் மடியில் உலகை முடித்திடுவேன்.


போகும் உயிர்
உனக்காக போக வேண்டும் சகி
உன் மீது போக வேண்டும்
உனை பார்த்துக் கொண்டே போக வேண்டும்

என் மகிழ்ச்சியும்
சோகமும் உனக்குள் மாத்திரமே

உன் வலிகள் எனக்குள்ளே வேண்டும்
உன் வெற்றியில்
உனை தூக்கி நான்
கொஞ்ச வேண்டும்

செல்லமாய் உன்னிடம்
கெஞ்ச வேண்டும்
உன் பாதத்தில்
ஒரு மிதி வாங்க வேண்டும்
உன் காலடியில் உயிரை விட வேண்டும்

கூட்டத்தில் உனையே பார்க்க வேண்டும்
உன் முகத்தில் புன்னகையை எப்பொழுதும் காண வேண்டும்
உன் கண்ணீரை எல்லாம்
நான் வாரி எடுத்துக் கொள்ள வேண்டும்
உன் மனதை
புன்னகை தேசமாய்
நான் பார்த்துக் கொள்ள வேண்டும்....

இந்த உலகம் என்னும் போர்க்களத்தில்
உன்னை தாக்க வரும்
உன் எதிரிகளின்
ஈட்டியை
உனக்கு பதிலாய்
நான் நெஞ்சில் தாங்கி
உன் மடியில் விழுவேன்
என்னை சுமந்து கொள் சகி.....

உனக்காக யாராக இருந்தாலும்
எதிர்த்து நிற்பேன்
கேள்வி கேட்பேன்
எனை கொன்று போட்டாலும்
உன் அருகில் வந்து விழுவேன்

உன் எதிரியை கொன்று விடுவேன்....

எந்த நிலையிலும்
உன்னுடன் தான் இருப்பேன்

தோல் சுருங்கி
தேகம் கருத்து
உடல் மெலிந்தாலும்
அன்பு அது மாறுமோ

இந்த உலகிலேயே
சிறந்த அழகு
என் அன்னை
அன்னைதெரசா தான்

அது போல் தான்
பரிசுத்தமான
அன்பை
உன் மீது நான் கொட்டி வைத்துள்ளேன்...

உன் எச்சிலை
என் கையில் ஏந்த கூட தயங்க மாட்டேன்...

உன்னை சுமந்து கொண்டு நடக்க
முகம் சுளிக்க மாட்டேன்...

அழகு என்றால்
அன்பு என்று தான்
எனக்கு தெரியும்....

உன் மேல் கொண்ட அன்பு அது
என் உயிர்
நின்றாலும் மாறாது.

நீ அருகில் இருந்தால்
சோகம் கூட தூரம் தான்...

நீ தூரம் போனால்
சிரிப்பு கூட வெறும் கானல் தான்....

ஒன்றே ஒன்று மட்டும் செய்துவிடு சகி....

நான் இறக்கும் பொழுது
எனக்கான
உன் மடியில் இடத்தை
நான் கேட்காமலேயே
தந்து எனை தாங்கிடு

நான் சிரித்துக் கொண்டே
உனை பார்ப்பேன்...

உன் பாடலை கேட்டுக் கொண்டே
உன் மடியில் தூங்குவேன்....

நான் உறங்கினாலும்
உன் குரல் என்
காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்
என் ஒளியே...
என் உதயமே....
என் உதயசகி.....


அந்த நொடி உன் விரலை
நன்றாக பற்றிக் கொண்டிருப்பேன்...
உன் மார்பில் சாய்ந்து கொண்டிருப்பேன்...
உன் தோளில் தோள் சாய்ந்திருப்பேன்
உன்னை ஆரத்தழுவி
முத்தங்கள் பல வைத்துக் கொண்டிருப்பேன்....
உன் மடியில் சரிய தயாராக இருப்பேன்....
என் சங்கீதமே....
என் கீர்த்தனையே
கீர்த்தனா....
என் சங்கீர்த்தா...

உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்
உன் கையை விடவேமாட்டேன்....
உன்னை தொலைத்துவிட்டால்
நான் தொலைந்து போவேன்...
உடலுக்குத் தான் அழிவு சகி...
உயிருக்கு இல்லை...
அன்பிற்கு இல்லை.....
உண்மை அன்பு
பல யுகங்கள் கடந்தாலும்
வாழ்ந்து கொண்டே இருக்கும்.....
நம் அன்பை போலவே.....

~ என் சகிக்கு
உன் அக்கா பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Oct-16, 6:57 am)
பார்வை : 435

மேலே