சிலநொடிகளில் கண்களின் சில துளிகள்
சிலநொடிகளில் கண்களின் சில துளிகள்
===================================
சிலர் வெளிநாடு போகலாம்
சிலர் அவர் இருப்பிடம் மாற்றி இருக்கலாம்
சிலர் நம்மிலிருந்து பிரிய மனமின்றி விடைபெற்று
ஒரு இறுக்கமான அணைப்பினால்
பிரிந்து சென்றிருக்கலாம்
நாமும் இதேபோல் அவர்களை பிரிந்து சென்றிருக்கலாம்
சிலர் எப்போதும் நம்மோடு அடுத்திருக்கலாம்
சிலர் எப்போதும் இல்லாமல் ம்ம்ம்
சிலர் அவர்களின் அகங்காரத்தினால்
நம்மை தொடர்பு கொள்ளாமலேயே விட்டுவிடலாம்
அதே அகங்காரத்தினால்
நாமும் அவர்களிடம் தொடர்பிலில்லாமல் ஆகிவிடலாம்
இப்படியாக பல நட்புகளை சம்பாதித்து ,,
கண்டு பழகி கடந்திருப்போம்,
அவர்களில் சிலர்
நமக்கு பாசத்திற்குரியவராக இருந்திருக்கலாம்
அவர்களில் சிலர்
தனிப்பட்டு பிரத்யேகமாய் நெருக்கமானவர்களாக
இருந்திருக்கலாம்
இவர்களில் யாரோ ஒருவரோடு
நமக்கு காதல் தோன்றியிருக்கலாம்
இவர்களில் சிலருக்கு
நம்மீதும் இப்படியொரு உணர்வு தோன்றி இருக்கலாம்
அவர்கள் எங்கே இருந்தாலும்
அவர்கள் எப்படி இருந்தாலும்
நாம் இன்னும் அவர்களை நினைத்துக்கொண்டேதான் இருப்போம்
அவர்களை மேலும் நேசித்துக்கொண்டும்
இழந்தாய் பேசிக்கொண்டும்
இன்னும் அவர்களின்மேல்
அக்கறை எடுத்துக்கொண்டும் தான் இருப்போம்
ஏனென்றால் நம் வாழ்வின்
ஏதோ ஒரு பகுதியோடு
அவர்கள் வாழ்ந்து சென்றிருப்பார்கள்
இதை தற்போதைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
காரியமாக்கவேண்டாம்
அவர்களுடன் எத்தனை அடுப்பத்தில்
உங்களின் நட்பு இருப்பினும்
அல்லது தூரத்தில் இருந்தாலும்
அதை காரியமாக்கவேண்டாம்
நம்மை விட்டுப்போனவர்கள்
தெரிந்து கொள்ளட்டும்
நாம் அவர்களை
இன்னும் மறக்கவில்லை என்பதை
நம்மிடம் தற்போதுள்ளவர்களிடமும்
இதை நாம் சொல்ல மறக்கவேண்டாம் ம்ம்
தமிழாக்கம் - "பூக்காரன் கவிதைகள்"