நட்பு

நட்பு :-
=======

நட்பு................
நடக்கும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுவது;
நடந்தால் உடனே நம்மை விட மகிழ்வது;
நடக்கா விட்டால் நம்மை நிதானப்படுத்துவது;
நடக்கா விட்டால் நம் உணர்வுகளை புரிந்துக்கொள்வது;

நட்பு...............
நாற்றம் பிடிக்கும் செயல்களை செய்தால் நம்மை சாடுவது;
நாணி த் தலை குனியும் நேரத்தில் நம்மை மீட்டு எடுப்பது;
நல்ல செயல்களை செய்யும்போது நம்முடன் இருப்பது;
நல்ல செயல்களுக்கு நம்மை மனதார பாராட்டுவது;

நட்பு........
நம்பி நின்றால் தலை கொடுத்தாவது காப்பது;
நம்பிக்கை விளக்கை மனதில் ஏற்றி வைப்பது;
நொந்து நிற்கும் நேரத்தில் ஆறுதல் குடை ஆவது;
நோயும் மனப்புண்ணின் வேதனை அறிவது;

நட்பு......
நாகமாய் சீறினாலும் நம் நிலை உணர்வது;
நாயாய் குரைத்தாலும் நம் நிலை அறிவது;
நக்கித் தின்ற நாட்களை கொஞ்சமும் மறக்காதது;
நட்பு நிலையில் நின்று குத்திக் காட்டாதது;

நட்பு.......
நகரா நிலையில் மனம் நின்றால் நகர்த்துவது;
நகர அவசரத்திலும் நட்பை மதிப்பது;
நகக் கண்ணில் அடிபட்டாலும் துடித்து நிற்பது;
நம்மை உயர்த்துவதில் மகிழ்ந்து நிற்பது;

************ஆக்கம் ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு )

எழுதியவர் : ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு) (30-Sep-16, 8:45 am)
Tanglish : natpu
பார்வை : 1398

மேலே