காதல்வேதம் ஓர் தீவிரவாதம்

கனவிலே உன் நினைவுப்பொருத்தி கன்னிவெடி வைக்கிறாய்...
இணையும் வேளையிலே முத்தத்தில் சயனைடு வீரியம் தருகிறாய்...
பிரிந்திருக்கும் காலங்களில் இதயத்திற்கு கண்ணீரமிளம் அனுப்புகிறாய்...
கோபக்கணை வீசுகையில் அன்பினை கொரில்லாவாய் தாக்குகிறாய்.....
உன் அணுஆயுதக் கண்மணிகளால் அனுதினமும் மிரட்டுகிறாய் ....
என் தேகத்தின் நெகக்கீறல் தடங்களுக்கு பகிரங்கமாய் பொறுப்பேற்கிறாய்....
மொத்தத்திலே ,
காதலே ! நீ வேதமுகாமிட்டிருக்கும் ஓர் அன்பானத் தீவிரவாதமே.....!!
..

எழுதியவர் : பாரதி பறவை (3-Oct-16, 4:46 pm)
பார்வை : 83

மேலே