மழலை வரமே

சிட்டுப் போல சிரித்து மயக்க
கட்டிக் கரும்பாய் இதயம் இனிக்கும்!
மட்டில் லாத மகிழ்ச்சி கொடுக்கும்
பட்டுப் போன்ற மழலை வரமே !

பிஞ்சுப் பாதம் எட்டி யுதைக்க
நெஞ்சி லணைத்து முதுகை வருடி
மஞ்சு முகத்தில் முத்த மிட்டு
கொஞ்சி மகிழ விழையும் மனமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Oct-16, 7:47 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : mazhalai varame
பார்வை : 64

மேலே