புயலெனப் பொங்கினாள்

காற்சிலம்பு கையேந்திக் கண்களில் நீர்மல்க
காற்றைக் கிழித்துக் கடுகிவந்தாள் - சீற்றமுடன்
கூந்தல் விரிய குலமகள் கண்ணகி
வேந்தனைக் காண விரைந்து .

புயலெனப் பொங்கியவள் பூகம்ப மானாள்
கயல்கொடி வேந்தனைக் கண்டாள் - தயக்கமின்றி
விட்டெறிய செம்பரல் மின்னித் தெறிக்கமன்னன்
விட்டா னுடனே உயிர் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Oct-16, 11:28 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 51

மேலே