வரம்
ஒரு முறைதான்
ஜனனம்!
ஜனித்தோம்
பிறரை மகிழ்வித்தோம்
பின்பே மரணித்தோம்
ஜனனம் என்பதே
இதற்காக தான்
என்பதை மறந்து
மரணத்தை முத்தமிட
துனிந்து
மரித்து போவதால்
பலன் ஒன்றுமில்லை
மரணத்தை வரவேற்க
தயாராய் அதுவரை
மற்றவர்க்கு
பரோபாகாரியாய்
வாழ்ந்து பார்
ஜனனத்தின் அர்த்தம்
புரியும்
மீண்டும் ஒரு
வாழ்க்கைக்கு
மனம் ஏங்கும்
அது கிடைக்காது
என்ற
உண்மை விளங்கும்
உன் முடிவும்
மாறும்..,
#sof_sekar