உழவன்

யார் உழவன் ?
காவேரி நீரை கையேந்தி நிற்கிறானே அவனா உழவன் !!!!

காத்து மழை என பாராமல்
செந்நீரை சிந்தி உழைக்கிறானே
அவன் உழவனா?

ஊருக்கு உணவளித்து
தான் உன்ன முடியாமல்
பசியில் கிடப்பவன் உழவனா ????

பேறுக்காக உழைக்காமல்
நாம் உண்ணும் சோறுக்காக
உழைப்பவன் உழவனா ??

ஊருக்கு உழைத்தாலும் அவன்
சோர்வுக்குக்கு காரணம் என்ன ?

உப்பில்லா உணவும்
உழைப்பில்லா மனமும் ஒன்று !

உழைப்பு இருக்கும் ஆண்டுமுழுதும்
உப்புகூட இருக்காது அவன் உண்டு மகிழ !!!!

தப்பு கூட செய்வதில்லை
தான் மண்ணுக்காக !!

தன் விளைச்சலால் பெற்ற பணத்தை கொண்டு ஓர் செப்புகூட வாங்கமுடியவில்லை தன் பெண்ணுக்காக !!!!!

உழுதவனின் வீட்டில் அடுப்பு எரிவதில்லை மாறாக !எறிவது
அவன் வயிறு !!!

தான் அளித்த உணவை உண்ணுவதை கண்டல்ல !!
இன்னும் சிறந்த உணவை அளிக்க முடியலே என்னால் என!!!

உழவனின் உழைப்பிற்கும்
அவன் மனதிற்கும் காரணம்
அவன் நண்பர்கள் நாம் அல்ல !!
நான்கூழ் புழுக்கள் !!!!

எழுதியவர் : தமிழ் செல்வன் .ஏ (4-Oct-16, 11:13 am)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : uzhavan
பார்வை : 200

மேலே